கடகம் ராசி

கடகம் ராசியின் குருபெயர்ச்சி பலன்கள் 2019-2020
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
மென்மையான மனமும், பாசமும் சிந்தித்து செயல்படும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!!
இதுவரை உங்கள் ராசியில் 5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து வந்த குருபகவான் இதற்குபின் உங்கள் ராசியில் 6ஆம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதுவரை இருந்துவந்த தடைகள் மற்றும் எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடிய பொன்னான காலம் ஆகும்.
ருண ரோக ஸ்தானத்தில் இருந்து குருதேவர் ஜீவன போக மற்றும் குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கின்றார். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா பயணம் சென்று மகிழ்வீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமான நிலை சீராகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் இது.
தவணை முறையில் பொருட்களை வாங்குவதன் மூலம் சொத்து சேர்க்கை அதிகரிக்கும். எதிர்காலத்தில் கூட்டுத்தொழில் செய்வதற்கான சூழல் உண்டாகும். 
நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் சிறப்பாக இருக்கும். சரியான வேளைக்கு உணவு உட்கொள்வதன் மூலம் இடுப்பு மற்றும் தொடை ஆகிய உறுப்புகளில் உண்டாகும் வலிகளை தடுக்க இயலும். உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். புத்திரர்களின் எதிர்காலம் சார்ந்த செயல்களை செய்து மகிழ்வீர்கள். சில இடமாற்றம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
 நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
தாங்கள் இத்தனை நாட்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தங்களுக்கு விரும்பிய இடத்தில் வேலைவாய்ப்புகள் அமையும். இதுவரை தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். 
தனவரவுகள் சிறப்பாக அமையும். தங்களது அலுவலக பணி தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களை பரிமாறும்போது சிந்தித்து செயல்படவும். மேலும் போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.
பெண்களுக்கு :
வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வேலை தேடும் பெண்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வேலை வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். புதுவிதமான இடமாற்றம் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். 
வரன் தேடுவோருக்கு சாதகமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். உறவுகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
தொழில் கல்வி பயில்வோருக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலைவாய்ப்புகள் அமையும். அடிப்படைக் கல்வி படிப்பவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் ஆதரவு மேலோங்கி காணப்படும். சட்டக்கல்வி பயில்வோருக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
 குருகுல கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்களது கல்வியில் விருதுகள் வாங்கும் யோகம் ஏற்படும். தர்க்க மற்றும் வாதங்களில் பங்கு கொண்டு கீர்த்தி அடைவீர்கள். நிர்வாகம் தொடர்பான கல்வியில் புதுவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
 
கட்சி சார்ந்த மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சாதுர்யமான பேச்சுக்கள் மற்றும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு அதன்மூலம் லாபமடைவீர்கள். 
அரசியல் சார்ந்த விஷயங்களுக்காக வெளிநாட்டு பயணம் சென்று வருவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது முயற்சியை துரிதப்படுத்தும். அதனால் பல சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம். தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
எதிர்பார்த்த விளைச்சல் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ரசாயன உரங்களை உபயோகிப்பதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். 
பூமிக்கடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகளால் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். விளைச்சலுக்கு தேவையான பாசன வசதிகள் உங்களுக்கு கைக்கொடுக்கும்.
வியாபாரிகளுக்கு :
இதுவரை தொழிலில் இருந்துவந்த முடக்கம் நீங்கி அபிவிருத்தி உண்டாகும். ரசாயனம் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு முன்னேற்றமான காலமாகும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலில் பலவிதமான முன்னேற்றங்களை அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் முதலீடு சார்ந்த கோப்புகளில் கவனத்துடன் கையாள வேண்டும்.
 பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியை கொடுக்கும் காலம் இது. தொழில் முன்னேற்றத்திற்காக வங்கி கடன் வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி உகந்த காலமாக அமையும்.
கலைஞர்களுக்கு :
வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று தங்களது திறமைக்கேற்ற வெற்றி பெறுவீர்கள். 
பிரபலமான மனிதர்கள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பழைய வழக்குகள் சில சங்கடங்களை கொடுக்க நேரிடும். நண்பர்களுடன் சேர்ந்து புதுவிதமான இடத்திற்கு பயணம் மேற்கொள்வீர்கள்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் இராகவேந்திரர் மற்றும் குருமார்களை தரிசனம் செய்துவர ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாக்கும்
உயிர்கள் அனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசம் என்றுணர்.