மீனம் ராசி

மீனம் ராசியின் குருபெயர்ச்சி பலன்கள் 2019-2020
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
மிகப்பெரிய பிரச்சனைகளையும் மிருதுவாக கையாளும் மீன ராசி நேயர்களே..!!
இதுவரை பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இனிவரும் காலங்களில் ஜீவன ஸ்தானத்தில் இருந்து தங்களின் எண்ணத்தை செயல் வடிவமாக மாற்றுவார். தனவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து குடும்ப, சுக மற்றும் ரண ருண ஸ்தானத்தையும் பார்க்கின்றார். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாதத்திறமையால் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். புதிய நபர்கள் மூலம் வருமானம் மேம்படும். தொழில் செய்யும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
உறவினர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப செயல்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய வெற்றிகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த புதிய லட்சியம் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசு சார்ந்த துறையில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். 
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
சக பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக அமையும். பொதுமக்கள் பணியில் உள்ளவர்களுக்கு மக்கள் தொடர்பு சிறப்பாக இருக்கும். பணி உயர்வுக்கான பயிற்சிக்கு சென்று வருவீர்கள். வருமான நிலை உயரும். கூடுதலாக மற்றொரு தொழில் செய்யும் சூழல் உருவாகும்.
பெண்களுக்கு :
போட்டித் தேர்வு எழுதிய பெண்களுக்கு அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்தில் தனவரவுகள் அதிகரித்து பொருளாதார நிலை சீராக இருக்கும். 
ஆரம்ப கல்வி நிலையத்தில் ஆசிரியர் பணி மற்றும் கடைநிலை ஊழியர் பணி ஆகியவைக்கு முயற்சி செய்தால் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் கையாளுவதில் சற்று கவனம் வேண்டும். 
மாணவர்களுக்கு :
அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெற வாய்ப்புகள் உள்ளது. குருகுலம் கல்வியை பயில்பவர்களுக்கு கல்வியில் சாஸ்திர ஞானம் பெருகும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் கண்காட்சி மற்றும் மாநாடுகளில் கலந்துகொண்டு தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையும். படித்து முடித்தவுடன் விரும்பிய துறையில் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
குடும்பத்தில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கலைத்துறையில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். 
இதுவரை தடைபட்டு கொண்டிருந்த வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கற்பனைத் திறன் சிறப்பாக இருக்கும். வருமான நிலை உயரும். நிகழ்கால நிகழ்வுகள் மற்றும் கிடைக்கும் அனுபவம் கொண்டு உருவாக்கும் படைப்புகளுக்கு ஆதரவுகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இதுவரை தங்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள் இனிமேல் நேசக்கரம் நீட்டுவார்கள். எதிர்காலம் குறித்து திடமான முடிவுகளை எடுக்க ஏற்றமான காலம் இது. தலைமைப் பொறுப்புகள் தங்களை தலை தூக்கி நிறுத்தப் போகிறது. 
குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்கும் ஆதரவால் மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மற்றும் ஆதரவுகள் மேம்படும்.
விவசாயிகளுக்கு :
புதிய பயிர் ரகங்களை வெளியிட்டு அதன்மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். கோதுமை, மிளகு போன்றவற்றின் விளைச்சல் அமோகமாக இருக்கும். ரசாயனம் சம்பந்தப்பட்ட பொருட்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். 
எள், கடுகு ஆகியவையில் இருந்து பெறப்படும் எண்ணெயை தயாரிப்பதன் மூலம் லாபம் பெருகும். விவசாய துறைகளில் புதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவிகளால் புதிய பரிணாமத்தை நோக்கி முன்னேற்றம் காண்பீர்கள்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் சார்ந்த எண்ணம் கொண்டவர்கள் எண்ணத்தை செயல் வடிவமாக மாற்றுவீர்கள். தங்களது தொழிலுக்கு நண்பர்களின் உதவி சிறப்பாக அமையும். வாழ்க்கை துணையின் ஆலோசனை தங்களை தொழிலில் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். 
பூர்வீக சொத்துக்களில் உள்ள ஏதேனும் ஒரு பங்கு தங்களுக்கு உதவியாக இருக்கும். ஆலய வழிபாடுகளை மேற்கொள்வது நன்று. புதிய நிர்வாகம் அல்லது அறக்கட்டளை போன்றவற்றை சுயமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தங்களது கனவுகளை நோக்கி செல்ல வேண்டிய பொன் போன்ற காலம் இது.
பரிகாரம் :
 
வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று மகாலட்சுமி வழிபாடு செய்ய சகல விதமான ஐஸ்வர்யங்களும் கைகூடும்.
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரம் உடையவனால் செய்யப்படும் செயல், ரஜோ குணத்தில் ஆன செயலாகக் கூறப்படுகிறது.