மேஷம் ராசி

மேஷம் ராசியின்குருபெயர்ச்சி பலன்கள் 2019-2020
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
எதிலும் துணிச்சலுடன், இறங்கி போராடும் மேஷ ராசி அன்பர்களே !!
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் பெயர், புகழ், செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும்.
இதுவரை உங்களுக்கு கிடைக்க இருந்த பாக்கியங்கள் அனைத்தும் தாமதப்பட்டோ அல்லது கிடைக்காமலேயோ இருந்திருக்கும். ஆனால், குருபெயர்ச்சிக்கு பின், இன்பங்கள் அனைத்தும் கைகூடும். இதற்குமேல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டப்போகிறது. பெண்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சங்கடங்கள் விலகி நன்மைகள் பெருகும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தந்தையின் அன்பும்,
 அரவணைப்பும் அதிகரிக்கும். நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும். வாரிசுகள் வகையில் பெருமைப்படக்கூடிய விஷயங்கள் நடக்கப்போகிறது. குலதெய்வக் கோவில் திருப்பணிகளில் முன்னின்று நடத்தும் பொறுப்புகள் வந்து சேரும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
 தன்னம்பிக்கையும், மனோதிடமும் அதிக அளவில் காணப்பெற்று மகிழ்வீர்கள். வெளிநாட்டில் வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு வாய்ப்புகளால் பெருமை அடைவீர்கள். ஆன்மிகத்தில் உள்ளவர்கள் பெயரும், புகழும் அடைவார்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
விரும்பிய இடங்களில் பணி இடமாற்றம் கிடைக்கும். இதுவரை மேல் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து தங்களின் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற பதவி உயர்வு பெறுவீர்கள். உங்களின் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் பல விருதுகளை வென்றிடுவீர்கள். தகுதிக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
இதுவரை தொழிலில் இருந்துவந்த முடக்கம் சரியாகி தொழிலில் மேன்மை உண்டாகும். பழைய வராக்கடன்கள் வசூலாகி தொழிலில் செல்வநிலை சிறப்படையும். 
வியாபாரம் சார்ந்த புதிய முயற்சிகள் அனைத்தும் கைகூடும். சக வியாபாரிகளிடம் இருந்த கசப்புகள் மாறி அவர்கள் தங்களை புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படும். பண முதலீடுகள் பலவகையிலும் பெருகி செல்வந்தராக திகழ்வீர்கள்.
மாணவர்களுக்கு :
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப பள்ளியில் முதன்மை நிலையை அடையும் வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. அதனால் கவனம் செலுத்திப்படிக்க வேண்டியது அவசியம்.
 படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கைகூடும். கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வியில் நாட்டத்துடன் காணப்படுவீர்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு தங்களது துறையில் வெற்றி பெற வாய்ப்புகள் நிறைய உள்ளது.
பெண்களுக்கு :
 
விரும்பிய இடத்தில் திருமணம் அமையும். புத்திர பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கள் திறமைக்கேற்ப பதவிகள் கைகூடும். தந்தை வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் மாறி சந்தோஷங்கள் பெருகும். குடும்பத்தில் பொருளாதார நிலை உயர்வடையும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் விஷயங்கள் நடைபெறும்.
விவசாயிகளுக்கு :
மஞ்சள் மற்றும் வருட பயிர்களை பயிரிடுவோருக்கு இந்த வருடத்தில் அமோகமான விளைச்சல் கிடைக்கும். 
பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் மாறி சுமூகமான தீர்வுகள் ஏற்படும். புதிய முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் வெற்றியை தேடித்தரும். புதுவிதமான யுக்திகளை கையாண்டு விருதுகளை பெற முயற்சிகள் மேற்கொள்வீர்கள். நீர்வளம் சிறப்பாக அமையும். பணியாட்களின் ஆதரவு சிறப்பை கொடுக்கும். சொத்து விரிவாக்க முயற்சி கைகூடும்.
அரசியல்வாதிகளுக்கு :
இதுவரை மேலதிகாரிகளிடம் இருந்துவந்த மன சஞ்சலங்கள் நீங்கி தங்களின் மனதினை புரிந்து கொள்வார்கள். தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு இந்த காலம் வெற்றியை தரும்.
 வயது மூத்தவர்களின் ஆதரவும், வழிகாட்டுதலும் பெரிய வகையில் கிடைக்கும். தங்களின் முயற்சிக்கு ஏற்றவாறு வெற்றிகள் உங்கள் கையில் வந்து சேரும். மனதில் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்பட தகுந்த காலம் இது.
கலைஞர்களுக்கு :
புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு புதிய சாதனைகளை படைப்பீர்கள்.பொருளாதார நிலை உயரும். வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மூலம் உயரிய விருதுகள் தங்களுக்கு காத்திருக்கின்றன. கலைகளில் எவரும் கண்டிராத புதிய நுட்பங்களை புகுத்தி வெற்றி வாகை சூட போகிறீர்கள். உங்கள் திறமை பளிச்சிடும் காலமிது.
வழிபாடு :
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து விநாயகர் அகவல் பாடி வர மேற்கண்ட பலன்கள் அனைத்தும் கைகூடி நற்பலனை பெறுவீர்.
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரம் உடையவனால் செய்யப்படும் செயல், ரஜோ குணத்தில் ஆன செயலாகக் கூறப்படுகிறது.