மிதுனம் ராசி

மிதுனம் ராசியின் குரு பெயர்ச்சி பலன்கள்
2019-2020
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
எதையும் மிகச் சரியாக செய்து முடிக்கும் மிதுன ராசி நேயர்களே...!
இதுவரை உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் இந்த குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இதுவரை மனதாலும், உடலாலும் பல இன்னல்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்த நீங்கள் இதற்குமேல் குருபகவானின் அருட்கடாட்சம் பார்வையை முழுமையாக பெற போகிறீர்கள்.
திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய வெற்றிகள் கிடைக்கும். புதிய குடும்ப உறுப்பினர்களின் வருகையால் குதூகலமான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தங்களின் தன்னம்பிக்கை மேலோங்கும். உடல் தோற்ற பொலிவுகள் மேம்படும். சுயதொழில் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். 
பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். செயலில் வேகம் மட்டுமின்றி நிதானமும் வேண்டும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தந்தையின் தொழில் முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வழக்கு தொடர்பான காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். 
எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முயற்சியை துரிதப்படுத்துவதன் மூலம் பணியில் விரும்பிய மாற்றம் உண்டாகும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சமூக சேவை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபவர்களுக்கு இந்த காலம் ஒரு வசந்த காலமாகும்.
வியாபாரிகளுக்கு :
தங்கம் மற்றும் நவரத்தினம் சார்ந்த வியாபாரிகளுக்கு முன்னேற்றமான காலம் இது. சுயதொழிலில் சிறப்பான முறையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழலும், லாபமும் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் உண்டாகும். பெரிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும்.
 கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு நன்மையை தரும். தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் லாபம் உண்டாகும். 
மாணவர்களுக்கு :
இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி கல்வியில் பல முன்னேற்றங்களை அடைவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் பல திருப்புமுனைகள் உண்டாகும்.
 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு தங்களது துறையில் கெளரவம் மற்றும் பாராட்டுக்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும்.
பெண்களுக்கு :
மனதில் நினைத்து பார்த்ததை விட மிகச் சிறப்பான திருமண வாழ்க்கை கைகூடும். இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இருவரும் இனி இரு உடல் ஓர் உயிர் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வீர்கள்.
 சிறுதொழில் செய்து வரும் பெண்களுக்கு தங்களின் தொழிலில் எதிர்பாராத சில திருப்புமுனைகள் உண்டாகும். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு புத்திர அபிவிருத்தி ஏற்படும்.
விவசாயிகளுக்கு :
மஞ்சள், வாழையை பயிரிடுபவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும். மஞ்சளின் விலை சற்று அதிகரித்து காணப்படும். சகோதரர்களிடையே இதுவரை இருந்துவந்த சொத்து பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். நீர்ப்பாசன நிலை தேவைக்கேற்ப காணப்படும். விளைச்சல் அதிகமாக இருக்கும். 
அண்டை, அயலார்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். விவசாயம் சார்ந்த மற்ற துறைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்குகொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
சமூகத்தொண்டு செய்பவர்களுக்கு இந்த காலம் உகந்தது. தாங்கள் செய்யும் அரசியல் செயலுக்கு ஏற்றவாறு தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் ஏற்படும். பொதுமக்களிடையே பிரபலம் அடைவீர்கள். 
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கான சூழல் உண்டாகும். பெரிய மாநாடுகளில் கலந்துகொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சிகரமாக அமையும்.
கலைஞர்களுக்கு :
புதிய ஒப்பந்தங்கள் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்தி மகிழ்வீர்கள். இதுவரை பிறரின் ஒத்துழைப்புடன் பணியாற்றி வந்தவர்கள் இனிமேல் உங்களின் தனித்திறமையை நிரூபித்து வெற்றியடைவீர்கள்.
 உங்களிடம் உள்ள மறைமுக திறமையை வெளிப்படுத்த சரியான காலம் இது. திறமைக்கேற்ற மதிப்பும், விருதும் தற்போது காத்திருக்கிறது. பொது தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.
வழிபாடு :
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு மாலையில் எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரம் உடையவனால் செய்யப்படும் செயல், ரஜோ குணத்தில் ஆன செயலாகக் கூறப்படுகிறது.