ரிஷபம்ராசி

ரிஷபம்ராசியின்குருபெயர்ச்சி பலன்கள்2019-2020

மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.

அன்புக்கு அடிபணியும் ரிஷபராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான சப்தம ஸ்தானத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது நடக்க இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்ல இருக்கின்றார். தங்கள் ராசிக்கு இப்போது நடந்து வரும் அஷ்டம சனியும், கேதுவும் மட்டுமல்லாமல் அஷ்டம குருவும் இணைந்து சில மாதங்களுக்கு செயல்படுகிறார்கள்.

இது வாழ்க்கையில் பலவிதமான புதிய அனுபவங்களையும், சில சோதனைகளையும் கடந்து வெற்றி வாகையை அளிக்கக்கூடிய காலங்களாக இருக்கக்கூடியதாகும். இந்த காலக்கட்டத்தில் உடன் இருப்பவர்கள் யார் யார் நலன் விரும்பிகளாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தக்கூடிய காலக்கட்டங்கள் ஆகும். எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.

 நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட காலமாக வீடு, மனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த காலம் யோகம் அளிக்கும் காலமாக அமையும். மனதிற்கு பிடித்த வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். மனதினுள் தோன்றிய எண்ணங்களை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு சில போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் புதிய அனுபவங்களையும், சில சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். உயரதிகாரிகளின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்வது உத்தமம் ஆகும். சக ஊழியர்களிடம் தங்களது கருத்துக்களை கூறும்பொழுது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

 உங்களது திறமைகளுக்கான அங்கீகாரங்கள் காலதாமதமாக கிடைக்கும். கடந்தகால சில அனுபவங்கள் மூலம் புதுவிதமான பரிணாமத்தையும், உத்தியோகம் சார்ந்த புதிய தடத்தையும் உருவாக்கக்கூடிய காலமாகும். புதிய முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு :

தொழிலில் ஏற்படும் பொருள் தேக்க நிலையினால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து அதனை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த குறைபாடுகள் நீங்கி மேன்மை உண்டாகும். பழைய வாகனங்களை மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றங்கள் செய்து பயன்படுத்தி மகிழ்வீர்கள்.

 தொழில் சார்ந்த புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான புதிய முயற்சிகளில் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மையை அளிக்கும். வேலையாட்களிடம் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை காட்டிலும் அவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால் சில சங்கடங்களை தவிர்க்கலாம்.

மாணவர்களுக்கு :

கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். படிப்பில் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆலோசனைகளையும், அவர்களது அரவணைப்பும் சிறப்பான முறையில் முன்னேற்றத்தை கொடுக்கும். வாகனங்களை ஓட்டும்பொழுது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். 

புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களிடம் உரையாடும்பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். விரும்பிய இடங்களில் எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.

பெண்களுக்கு :

தந்தைவழி உறவுகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையையும், அன்பையும் அதிகப்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வுகளையும் அதை எதிர்கொள்ளும் மனப்பான்மையும் உண்டாகும். தாயின் ஆலோசனைகள் முன்னேற்றமான சூழலை உருவாக்கித் தரும். புதிய உடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும்.

 செய்யும் முயற்சிகளை துரிதப்படுத்துவதன் மூலம் புதிய வாய்ப்புகளும், முன்னேற்றமும் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கணவருடைய பொருளாதார நிலைகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். 

விவசாயிகளுக்கு :

பாசன வசதிகளால் மேன்மையான சூழல் ஏற்படும். பயிர்களுக்கு தகுந்த காலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது விளைச்சலை அதிகப்படுத்தும். வருட பயிர்கள் தொடர்பான விளைச்சலை மேற்கொள்ளும்போது ஆலோசனைகளைப் பெற்று மேற்கொள்ளவும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் உயில் தொடர்பான விவகாரங்கள் குறைந்து சுமூகமான தீர்வு கிடைக்கும். 

பழைய பிரச்சனைகளால் சில சங்கடங்கள் நேரிடலாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொத்துக்களை வாரிசுகளுக்கு பகிர்ந்து அளிப்பதற்கு சாதகமான காலமாகும். 

அரசியல்வாதிகளுக்கு :

சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவதற்கான சூழல்கள் ஏற்படும். கட்சி தொடர்பாக உயரதிகாரிகளிடம் கருத்துக்களை கூறும்போது கவனம் வேண்டும். செய்யாத சில செயல்களுக்காக சில அவப்பெயர்களும் தேவையற்ற வீண் வம்புகளும் அவ்வப்போது தோன்றி மறையும். 

வாக்குறுதிகளை அளிக்கும்பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது மேன்மையைத் தரும். மற்றவர்களுக்கு ஜாமீன் மற்றும் கடன் சார்ந்த முயற்சிகளில் முன் நிற்கும்பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும்.

 எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்தை உருவாக்கினாலும் பொறுமையுடன் செயல்பட்டால் நட்சத்திரங்களைப் போன்று மின்னுவதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தரும்.

கலைஞர்களுக்கு :

கலை தொடர்பான வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த புதிய முயற்சிகள் யாவும் மெல்ல மெல்ல சாதகமாக அமையும். உங்களின் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தகுந்த காலக்கட்டமாகும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல திறமைகள் மறைக்கப்படும் தவிர அவைகள் வீண் போவதில்லை.

வழிபாடு :

தேய்பிறையில் வரும் அஷ்டமி அன்று பைரவருக்கு மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வர சிறப்பான பலன்கள் உண்டாகும்.

விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரம் உடையவனால் செய்யப்படும் செயல், ரஜோ குணத்தில் ஆன செயலாகக் கூறப்படுகிறது.