சிம்மம் ராசி

சிம்மம் ராசியின் குருபெயர்ச்சி பலன்கள்  2019-2020
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
சவால்களை வென்று சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே ..! 
இதுவரை சுகஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் இனி ஐந்தாம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து தங்களுக்கு அனைத்துவிதமான மகிழ்ச்சிகளை தரவிருக்கிறார்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து பாக்கிய, லாப மற்றும் ஜென்ம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். 
மனதில் நினைத்த மற்றும் செய்ய துவங்கிய அனைத்து காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு தகுந்த காலமாக இருக்கும். அரசு சார்ந்த நிர்வாகப் பொறுப்புகள் உங்களை வந்துச் சேரும். பெரியோர்கள் மற்றும் மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் அருட்பார்வை கிடைப்பதால் உன்னத புண்ணிய காரியங்களை செய்து மகிழ்வீர்கள். தொழிலில் ஈட்டப்படும் தொகையை சேமிப்பதன் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
 தந்தையின் ஆரோக்கியம் மேன்மையடையும். மூத்த சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கைகூடும். வாரிசுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த வெளிநாடு சுற்றுலா சென்று வருவீர்கள். சமூக சேவையில் உள்ளவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு பொன்னான காலமாக அமையும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன்களை முடித்துவிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவு தங்கள் பணியில் ஒரு சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்லும். தந்தையின் தொழிலுக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள். 
உத்தியோகம் சார்ந்து வெளியூர் பயணம் சென்று வர வேண்டுமென்று மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கைகூடும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். புதுவிதமான அனுபவங்களால் செல்வாக்கு மேம்படும். உத்தியோகம் தொடர்பான அடுத்த இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். வெளியூரில் தொழிலை செய்வதற்கான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். வேலையாட்கள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த துறைகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிந்தனைகளுக்கு செயல் வடிவம் அளித்து மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு :
அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் நாட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான சூழல் உண்டாகும். 
கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்புகள் அமையும். ஆராய்ச்சிகளில் பணியாற்றுபவர்களுக்கு தங்களது கல்வி சார்ந்து ஏதேனும் புதிதாக கண்டுபிடிப்பீர்கள். குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது குருவின் ஆசியை நிச்சயம் பெறுவீர்கள். கல்வி முன்னேற்றத்திற்காக தந்தையின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு :
திருமணம் முடிந்து பெண்களுக்கு விரைவில் புத்திரப்பாக்கியம் கிட்டும்.
 தந்தை வழியில் ஆதரவுகள் மேலோங்கி காணப்படும். தாயின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிறு, குறு தொழில் செய்யும் பெண்கள் தங்களது பணியில் சற்று முயற்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கும். உத்தியோகம், வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
விவசாயிகளுக்கு :
உழவு தொழில் செய்பவர்களுக்கு தங்களது தொழிலில் அமோகமான விளைச்சலை காண்பீர்கள்.
 வாழையின் விலை சற்று அதிகரித்து காணப்படும். துவரையின் விளைச்சல் நிலை சிறப்பாக அமையும். பூமிக்கு அடியில் விளையும் பயிர்கள் நன்கு செழிப்பாக விளையும். பாசன வசதிகள் மேம்படும். மனை தொடர்பான கடன் பிரச்சனைகள் குறைவதற்கான உதவிகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி சார்ந்த மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல் சார்ந்த நண்பர்களுடன் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.
 பேச்சில் பொறுமை அவசியம். செய்யும் முயற்சிக்கு ஏற்ப பல வெற்றிகளை அடைவீர்கள். தொண்டர்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சில செயல்பாடுகளில் போராட்டங்களுக்கு பின்பே வெற்றி கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
தங்களது கலைத்துறையில் விதவிதமான முத்திரைகளை பதிக்கப் போகிறீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். 
மனதை எப்போதும் மகிழ்ச்சி நிலையில் வைப்பதன் மூலம் பலவிதமான முன்னேற்றங்களை அடைவீர்கள். தங்களது தனித்தன்மை மேலோங்கி காணப்படும். இசை கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குரு தட்சிணாமூர்த்தியை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நெய்வேத்தியம் ஆன பொட்டுக்கடலை வைத்து பிரார்த்தனை செய்து வர குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உண்டாகும்.
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரம் உடையவனால் செய்யப்படும் செயல், ரஜோ குணத்தில் ஆன செயலாகக் கூறப்படுகிறது.