தனுசு ராசி

தனுசு ராசியின் குருபெயர்ச்சி பலன்கள் 2019-2020

மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.

உதவி என்று வருவோருக்கு தயக்கமின்றி தன்னால் ஆன உதவிகளை செய்திடும் தனுசு ராசி அன்பர்களே!!.

இதுவரை உங்களின் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலேயே ஆட்சி பெறுகிறார். ஏழரை சனியின் கடுமையான பாதிப்புகள் குறையும். குழப்பமான நிலையில் இருந்து தெளிந்து, நிலையாக நின்று வெற்றிக்கொடியை நிலைநாட்ட போகிறார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து பூர்வீக களத்திர மற்றும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கின்றார். புத்திக்கூர்மை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி சார்ந்த முடிவுகளில் பெரியார்களின் வழிகாட்டுதல் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். வெளியூர் பயணம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

குருவின் ஏழாம் பார்வை ஏழாம் பாவத்தை பார்ப்பதால் நண்பர்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் இருந்துவந்த சங்கடங்கள் மாறும். பகையான நண்பர்கள் விரும்பி வந்து இணைவார்கள். கணவன், மனைவி ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக அமையும். வர்த்தக தொடர்பான பணிகளில் ஆதாயமான சூழல் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

செய்யும் செயல்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பொதுநலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த தேடல் பிறக்கும். சபைகளில் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் கௌரவ பதவிகளால் செல்வாக்கு மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

பணிபுரியும் இடத்தில் பெரும் செல்வாக்கும் மேம்படும். உத்தியோகத்தில் உயர் பதவிக்காக முயற்சி செய்பவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்கு பின்னர் நல்ல இடத்தில் வேலைவாய்ப்பு அமையும். அலுவலக பணிகளில் உங்களின் திறமைகள் பளிச்சிடும் காலமாகும்.

 மேலதிகாரிகளிடம் பாராட்டும், நன்மதிப்பு பெறுவீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகம் தொடர்பான பயிற்சிக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று மகிழ்வீர்கள். வேலைகள் தொடர்பான புது முயற்சிகள் கைக்கூடும்.

விவசாயிகளுக்கு :

நீர் பாசனத்தின் நிலை தேவைக்கேற்ப சிறப்பாக அமையும். வயல்களில் புதிய நுட்ப கருவிகள் மூலம் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். 

மனை சார்ந்த கடன்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீகத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் விலகி சுமூகமான சூழல் ஏற்படும். மகன் மற்றும் மகளின் திருமண ஏற்பாடுகள் கைகூடும். பிரபலமானவர்களின் நட்புகள் மாற்றமான சூழலை உருவாக்கும்.

பெண்களுக்கு :

இதுவரை திருமணம் கைகூடாத பெண்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பின்னர் நல்ல இடத்தில் விவாகம் அமையும். திருத்தல சுற்றுலா சென்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தங்களின் திறமைக்கு ஏற்ற பதவி உயர்வு கைகூடும். 

தந்தை வழி உறவினர்கள் மூலம் ஏற்பட்ட சிறு சிறு சஞ்சலங்கள் மாறி சந்தோஷம் உண்டாகும். நீண்ட காலமாக எதிர்பார்த்த வீடு, மனை வாங்கும் யோகம் நிறைவேறும். எதிர்பாராத சில மாற்றம் மூலம் வாழ்க்கையில் புதிய அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

மாணவர்களுக்கு :

அடிப்படை மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள். போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள். 

பெரியோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்று ஆசி பெறுவீர்கள். விரும்பிய இடங்களில் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள் அமையும். ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்பினால் சாதனை பெறுவார்கள். எதிர்பார்த்து கொண்டிருந்த வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அரசியல்வாதிகளுக்கு :

தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் ஏற்படும். தொண்டர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு பல சாதனைகளை படைக்கப் போகிறீர்கள். ராஜ பிரதிநிதிகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். 

சாதுர்யமாக செயல்பட்டு பல இன்னல்களை வெற்றி கொள்ள போகிறீர்கள். வஞ்சக எண்ணத்துடன் நட்பு கொண்டவர்களின் நிஜ முகம் உங்களுக்கு தெரியப்போகிறது.

கலைஞர்களுக்கு :

புதுவிதமான செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகள் மேம்படும். கலை சமூகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பான பலனை கொடுக்கும். 

பரதம் மற்றும் இசை போன்ற கலையை தொழிலாக கொண்டவர்கள் மேடையில் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். சாஸ்திரத்தின் அறிவு சிறப்பாக இருக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு மேலோங்கும். பொறுமையாக இருந்து முயற்சியை துரிதப்படுத்துவதனால் பல வெற்றிகள் கிடைக்கப் போகிறது.

வியாபாரிகளுக்கு :

தந்தையின் தொழிலை தன் தொழிலாக மேற்கொண்டவர்களுக்கு சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் புதிய யுக்தியை கையாளுவதன் மூலம் அமோகமான வெற்றி அடைவீர்கள். 

உங்களது தொழிலுக்கு வாழ்க்கை துணை பெரும் உதவி செய்வார்கள். தொழில் சார்ந்த பெரிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு செய்யவும். மென்பொருள் சார்ந்த வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும்.

வழிபாடு 

வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு சுண்டலை நைவேத்தியமாக வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.

விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரம் உடையவனால் செய்யப்படும் செயல், ரஜோ குணத்தில் ஆன செயலாகக் கூறப்படுகிறது.