அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எம் வழியிலே வருவதாக எவனொருவன் உறுதியாக முடிவெடுத்து வந்தாலும், உடனடியாக, சற்றும், தயவு, தாட்சண்யம் பார்க்காமல், எப்படி வீட்டிற்குள் அரவம் வந்துவிட்டால் அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒரு மனிதன் ஈடுபடுகிறானோ, எப்படி ஒரு இல்லம் தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க முயல்கிறானோ, அதைப் போல, உள்ளத்திலே ஒரு தீய எண்ணமும், ஒரு ஒழுக்கக்கேடான எண்ணம் தோன்றினால், அது முளை விடும்பொழுதே, அதனைக் கிள்ளி எறிந்து விடவேண்டும். அது வ்ருக்ஷமாகிவிட்டால் பின்னர் அதை அகற்றுவது கடினம். அது இருந்துவிட்டு போகட்டும், நன்றாகத்தான் இருக்கிறது, அழகாகத்தான் இருக்கிறது என்று ஒரு மனிதன் எண்ணினால், பிறகு அந்த தீய விருக்ஷம் அவன் உள்ளம் என்னும் வீட்டையே இடித்துவிடும். எனவே இகுதொப்ப கருத்தை மனதிலே வைத்துக் கொண்டு காலகாலம் எமது வழியிலே விடாப்பிடியாக வருகின்ற சேய்களுக்கு, இறைவன் அருளால் யாம் எமது நல்லாசியைக் கூறிக்கொண்டே இருப்போம். ஆசிகள்.