ருதுவான திதி பலன்கள்

ஒரு பெண் ருதுவான திதிக்கு பலன் உரைத்திருக்கின்றனர். இது வளர்பிறை தேய்பிறை என இரண்டுக்கும் பொருந்தும். பிரதமை திதியில் ஒரு பெண் ருதுவானால், பாவியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம். துவிதியை திதியில் ஒரு பெண் ருதுவானால், பாக்கியவதியாயிருப்பாள். திரிதியை திதியில் ஒரு பெண் ருதுவானால், குழந்தைகளைப் பெறுவாள். சதுர்த்தி திதியில் ஒரு பெண் ருதுவானால், பல புருஷரையிச்சிப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம். பஞ்சமி திதியில் ஒரு பெண் ருதுவானால், நன்மையடைவாள். சஷ்டி திதியில் ஒரு பெண் ருதுவானால், சண்டைகாரியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம். சப்தமி திதியில் ஒரு பெண் ருதுவானால், புத்திரபாக்கியமுண்டாயிருப்பாள். அஷ்டமி திதியில் ஒரு பெண் ருதுவானால், இராட்சசியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம். நவமி திதியில் ஒரு பெண் ருதுவானால், கிலேசமாயிருப்பாள். தசமி திதியில் ஒரு பெண் ருதுவானால், புத்திரபாக்கியமுண்டாயிருப்பாள். ஏகாதசி திதியில் ஒரு பெண் ருதுவானால், சுகிகரமாயிருப்பாள். துவாதிசி திதியில் ஒரு பெண் ருதுவானால், பலரையுந் துஷிப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம். திரியோதிசி திதியில் ஒரு பெண் ருதுவானால், நல்ல தாஜசுண்டாகி இருப்பாள். சதுர்த்தசி திதியில் ஒரு பெண் ருதுவானால், பாபஞ்செய்கிறவளாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம். பெளர்ணமி திதியில் ஒரு பெண் ருதுவானால், அசல்வீடு திரிவாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம். அமாவாசை திதியில் ஒரு பெண் ருதுவானால், தரித்திரமாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்