கும்ப ராசி

கும்பம்  ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

- கும்பம்

குருபகவான் துலாம் ராசிக்கு வருவதால் சிறப்பான பலன் கிடைக்கும். அவரது 9-ம் இடத்துப் பார்வையால் நன்மை மேலோங்கும். எந்த தடைகளையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் உள்ள கருத்துவேறுபாடு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடி வரும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். சிலர்அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப் படுவர்.

வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

மாணவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம்.

விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு உண்டாகும்.

பெண்கள் மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும்.

 

பரிகாரம்: ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுங்கள். பாம்பு புற்றுக் கோவிலுக்குச் சென்று வரலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குவது நல்லது. ஆதரவற்றோருக்கு உதவுங்கள்.

செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர் முருகன் கோவில்.

 

 

 

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!