கும்ப ராசி

கும்பம்

(அவிட்டம், 3, 4ம் பாதங்கள் சதயம் 1-2-3-4 பாதங்கள், பூரட்டாதி, 1, 2, 3,ம் பாதங்கள்)
ராசி மண்டலத்தில் 11வது ராசியாகத் திகழ்வது கும்பராசி ஆகும். எதையும் சந்திக்கும் ஆற்றலும், நெஞ்சிலே உறுதியும் அனைவரையும் வசீகரிக்கும் ஆற்றலும் உடையவர்களாக திகழ்பவர் நீங்கள். தலைமைப் பணபும், எதையும் நன்கு சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். நல்லது, கெட்டது, எது என்று பகுத்தாய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற என்ணமும் சதா சிந்தித்து கொண்டும் சிந்தித்தை செயல்படுத்தவும் அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறவும் என்ன வழிகள் என்பதை ஆராயும் திறமை உடையவர்கள்.

தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக சிந்தனையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாத உயர்ந்த பண்பாளர் நீங்கள்.

உண்மை பேசுவதையும் உள்ளதை பேசுவதையும் நல்லதே பேச வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் சற்று சுய நலவாதிகளாகவும் விளங்குவீர்கள். உங்கள் மனதுக்கு சரி எனப்பட்டதை செய்யும் எண்ணம் உடையவர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்த சனிபகவான் உங்கள் ராசிநாதனுமாகி அவர் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பானது என்று தான் கூற வேண்டும்.
உங்களது கௌரவம் அந்தஸ்து புகழ் கீர்த்தி அதிகரிக்கும், பேச்சில் நடை, உடை பாவனைகளில் மாற்றமும் ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். இதுவரை மனதில் இருந்து வந்த பயம், பீதி, மனக் குழப்பம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும். அதற்கான சரியான நபர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும். அக்கம் பக்கம் உங்களை பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கும். உங்களை பற்றிய அறிமுகம் மற்றவர்களை சென்றடையும் காலமாகும்.

இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் நகைகள் இவைகள் எல்லாம் கைக்கு வந்து சேரும். பேச்சால், எழுத்தால் செயலால் ஒரு சிலருக்கு எதிர்பாராத தன வரவு பொருள் வரவு கிட்டும். உடன் பிறந்த சகோதர சகோதரர்களால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். புதுப் புது உறவுகள் வந்து சேரும்.

அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கூடும். அதே சமயம் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அல்லது அவர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.
மனை வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

தாயாரால் எதிர்பாராத நன்மைகள் அமையும். அவர்கள் உடல் ஆரோக்யம் சீராக இருந்து வரும். இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற தூக்கம் குறைந்து இனி ஓரளவு நிம்மதியான தூக்கம் வந்து சேரும். உயர் கல்வி பயிலவும் அதனால் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு அமையும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும்.
நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குடும்பத்தில் புது வரவுகள் அதாவது மருமகன் மருமகள் பேரன் பேத்திகள் போன்றவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய படிப்பு அல்லது புதிய பயிற்சி இவற்றை மேற்கொள்ள வேண்டிய காலமிது. இதுவரை இருந்து வந்த தயக்கம் தடுமாற்றம் இவை விலகி உழைப்பு என்ற சொல்லே மேலோங்கி அதன் மூலம் பொருள் ஈட்ட உங்களுக்கு சரியான காலம் இதுவாகும்
காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

ஒரு சிலருக்கு காதல் வெற்றியாகி அது திருமணத்தில் நல்லபடியாக முடியும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். குழந்தைகளால் தேவையற்ற மனவருத்தங்கள் வேதனைகள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக தரிசனங்களும் ஆலய தரிசனங்களும் அடிக்கடி சென்று வருதல் வேண்டும்.
வேலையாட்களால் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் ஓய்ந்து நல்ல வேலையாட்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும்.

மேலும் தேவையற்ற போட்டி எதிர்ப்பு, பகை, வம்பு வழக்கு கடன் விவகாரம் போன்றவற்றை முறியடிக்க கூடிய ஆற்றல்களும் அதிகரிக்கும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விட வேண்டிய வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தந்தையாரின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். 
வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். மேலும் நண்பர்களால் உறவினர்களால் எதிர்பாராத தனவரவு அதிகரிக்கும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை அமையும்.