கும்ப ராசி

புத்திர்களால் யோகம் உண்டாகும். பரம்பரை சொத்து விலங்கம் தீரும். எதையும் குணமாக சொல்லும் கும்ப ராசிக்காரர்களே. உங்களுக்கு 2019 ஆண்டு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குரு பத்தாம் வீட்டில் இருக்கிறார் ஏப்ரல் மாதம் அதிசாரமாக தனுசு ராசியில் அமர்கிறார். அதன் பின்னர் மீண்டும் விருச்சிகத்திற்கு செல்லும் குரு பகவான் அக்டோபர் மாதம் பெயர்ச்சி அடைந்து தனுசு ராசியில் அமர்கிறார். லாப வீட்டில் அமரும் குருவினால் மேலும் லாபங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே உங்கள் ராசிநாதன் சனி லாபங்களையும் நன்மைகளையும் தந்து கொண்டிருக்கிறார். கூடவே குருவும் இணைகிறார். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் சஞ்சரிப்பதால், செயலில் வேகம் கூடும். வருமானம் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். அழகும் வசீகரமும் அதிகரிக்கும். சேமிப்பு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ராகு 5ஆம் வீட்டுக்கு வருவதால், பிள்ளைகளால் வீண் அலைச்சலும் மன உளைச்சல் ஏற்படும். அம்மாவின் உடல்நிலை சரியாகும். ராகு காலத்தில் துர்க்கா பூஜை செய்யலாம். விரைய ஸ்தானத்தில் இருந்த கேது லாப வீட்டுக்குள் வருவதால், தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.