கடக ராசி

கடகம் ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

கடகம் :

இந்த காலத்தில், ராகு கேதுவின் சாதகமற்ற நிலையுடன், குருவும் 4-ம் இடத்திற்கு வருவார். இதனால், பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் இருந்தாலும், செலவும் துரத்தும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் இல்லை. உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது.

பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால், உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரிகள் புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அரசு வகையில் எந்த உதவியும் கிடைக்காது.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும்.

பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: குருவுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். ராகு-கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் வழிபாடு மிகவும் உயர்வை தரும்.

செல்ல வேண்டிய தலம்: திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் உள்ள ராகு சன்னிதி.

 

 

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!