கடக ராசி

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 1-2-3-4 பாதங்கள், ஆயில்யம் 1-2-3-4 பாதங்கள்)
வான மண்டலத்தில் நான்காவது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதன் சந்திரன் ஆவார்.

நவக்கிரகங்களில் சந்திரன் ஒருவர் மட்டுமே வளர்ந்து தேய்ந்து வலம் வருபவராக இருப்பார். ஊரோடு சேர்ந்து வாழ்ந்து பழகும் இயல்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும் அதை செயல்படுத்துவதில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள்.

அதற்காக முயன்று வெற்றி பெறுவீர்கள். எதற்கும் ஆசைப்படாத உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தணியாத ஆர்வம் இருக்கும்.
கடகம் ராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இனி உங்கள் ராசிக்கு 6ம் இடமான ஜெயம், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார்.

இரண்டரை ஆண்டு காலமாக போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியின் சுவையை உணர வேண்டிய தருணம் வந்து விட்டது.

இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன விஷயங்கள் எளிதில் வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும்.
6ஆம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உருவாக்குவார்.

வேலையில் முன்னேற்றமும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவார். உங்களுக்கு பிடித்த வேலையில் அமரும் வாய்ப்பு அமையும். அதிக மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் உங்களைச் செயல்பட வைப்பார். இதுவரை வெளியே கடன் கொடுத்திருந்த பணம் வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதியமும், ஊதிய உயர்வும் உண்டாகும்.
ஒரு சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும்.
உங்களுடைய கௌரவம் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறப் பாடுபடுவீர்கள். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும்.

உடன் பிறப்புகளுக்கு சுப மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தாயாரால் உதவிகள் உண்டாகும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு வண்டி வாகனம், வீடு, இடம், மனை போன்றவைகள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உங்களது உழைப்பு பிறருக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி உறவினர் வீட்டு சுப விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளால் நன்மைகள் ஏற்படும்.
வேலையாட்களால் நன்மை உண்டாகும்.

தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தேவைக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாழ்க்கையில் புது புதுப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும்.

போக்குவரத்து வண்டி வாகனங்களில் பயணிக்கும் பொழுது அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.
புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருக்கும். முன்னோர்கள் சம்பாத்தித்த சொத்து கிடைக்கும்.
தந்தையாரின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். அரசாங்கத்தால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிக கவனம் தேவை. நண்பர்களால் நன்மை உண்டாகும்.