கடக ராசி

கற்பனை உணர்ச்சி அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு சாதகமாகவே உள்ளது.தன ஸ்னாத்தை குரு பார்ப்பதால் தன தானியங்கள் பெருகும். குருபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் திருப்பங்களும் வசதி வாய்ப்புகளும் பெருகும். குருபகவான் அதிசார வக்ர சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. தடைபட்ட காரியங்கள் முடிவடையும். வீட்டில் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும். சனிபகவான் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. ஆறில் சனி அமர்ந்திருக்க எதிரிகள் தொல்லை ஒழியும். ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார்.வர்த்தக தொடர்பு ஏற்படும்.சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது 6ம் வீட்டிற்க்கு வருவதால் புது வேலை வாய்ப்பு அமையும். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும். வைத்தியநாத ஸ்வாமியை வணங்கலாம்.