மகர ராசி

மகரம் ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

  - மகரம்

முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாத காலம். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமகலாம்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வளர்ச்சி சீராக இருக்கும்.

கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டி இருக்கும்.

விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தட்டிபோகும். பக்கத்து நிலத்துகாரரிடம் அனுசரித்து போவது நல்லது.

பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

பரிகாரம்: ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்யலாம். மேலும் சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம். விநாயகரையும், நரசிம்மரையும் வழிபட்டு வாருங்கள்.

செல்ல வேண்டிய தலம்: மதுரை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில்.

 

 

 

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!