மகர ராசி

வெளிநாட்டு பயணங்கள் கை கூடி வரும், திருமண யோகம் கூடி வரும். சனியை ஆட்சிநாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே... பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை புரிந்து கொண்டவர்கள் நீங்கள். 2019 ஆம் புத்தாண்டு வருமானத்தை அள்ளித்தரும் ஆண்டாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரத்தினால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் கட்டுப்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் கைகூடி வரும். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து வைக்கும் நேரம் வந்து விட்டது. திறமைக்கு ஏற்ப வேலையும் ஊதியமும் கிடைக்கும். விரைய சனியின் பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் பிற கிரகங்களின் கூட்டணி சஞ்சாரம் சாதகமான பலன்களையே தரப்போகிறது. 6ஆம் பாவத்தில் ராகுவும் 12 ஆம் பாவத்தில் கேதுவும் அமரப்போகின்றனர். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும்.போட்டி பொறாமை பொடி பொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு வேலைகள் அமையும். செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானை எள் விளக்கு போட்டு தரிசனம் செய்யலாம்.