மிதுன ராசி

மிதுனம் ராகு கேது பெயர்ச்சி :

27.07.2017.முதல்.13.02.2019வரை.

மிதுனம் :

இந்த சமயத்தில், கேது-ராகுவால் ஏற்படும் பிரச்னைகளை குரு 5ம் இடத்துக்கு வந்து சரி செய்வார். பொருளாதார நிலை வளர்ச்சி அடையும். நீங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் மறையும்.

பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடலாம். உங்கள் திறமை மேம்பட்டு இருக்கும். புதிய பதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது சிலர் வணிக விஷயமாக வெளிநாடு செல்வர். முதல்போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அரசு வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். மாணவர்களுக்கு விரும்பிய பாடம், கல்லுõரியில் இடம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து பாராட்டு, விருது கிடைக்கும். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

விவசாயிகள் புதிய சொத்து வாங்குவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்கள் குதூகலமான பலனை காண்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

 

பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். பத்ரகாளியம்மனுக்கு விளக்கேற்றி பூஜை செய்யவும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

செல்ல வேண்டிய தலம்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில்.

 

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!