மிதுன ராசி

புத்திசாலித்தனதை இடத்திற்கு ஏற்ப உபயோகிக்கும் மிதுன ராசிக்காரர்களே... கோடிஸ்வர யோகம் அளிக்கும் குரு பகவான். இந்த ஆண்டு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். அவரின் அதிசார சஞ்சாரத்தினால் செல்வாக்கு கூடும். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவி, கணவன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குரு பெயர்ச்சியினால் திடீர் பயணங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். சனிபகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ள நிலையில் ராகு ஜென்ம ராசியிலும் கேது ஏழாம் வீட்டில் அமர்கிறார். ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார்.அனைவரும் வணங்க தக்க வாழ்க்கையை கொடுத்தாலும் சிலரை கண்டாலே வெறுப்பாக இருக்கும்.நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். இந்த ஆண்டு உங்களுக்கு ஆதாயம் தரும் ஆண்டாக அமையப்போகிறது.