சிம்ம ராசி

சிம்மம் ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

சிம்மம்

ராகு, கேது மட்டுமின்றி பிற முக்கிய கிரகங்களும் சாதகமாக காணப்படவில்லை. கடந்த காலங்ளை போல் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. தீவிர முயற்சியின் பேரில் காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை மனைவியிடம் ஒப்படைக்கவும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதுநல்லது. ஆனால், குருபகவானின் வக்ர காலமாக 3-8-2017 வரை அவரால் ஓரளவு பலன் கிடைக்கும்.

பணியாளர்கள் கடந்த காலத்தை போல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரத்தில் அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். தீயோர் சேர்க்கையால் அவதிப்படலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். அரசு உதவி கிடைப்பது அரிது.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.

மாணவர்கள் அதிகமாக சிரத்தை எடுத்து படித்தால் தான் உயர் மதிப்பெண் பெற முடியும்.

விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். வேலைக்குச் செல்லும் பெண்கள்விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும்.

பரிகாரம்: பத்ரகாளியம்மனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

செல்ல வேண்டிய தலம்: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில்.

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*撚மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை*விட நல்லதாகும்..!!