துலா ராசி

தூலம் ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

தூலம்

சனி, குரு, கேது ஆகிய கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும், குருவின் அனைத்துப் பார்வைகளும் சாதகமாக உள்ளன. அதன் மூலம் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முயற்சி எடுத்தால் மட்டுமே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

வியாபாரிகள் அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழில் நல்ல வளர்ச்சி அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரியால் உருவாகும் பிரச்னையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.

கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். மாணவர்கள் விடா முயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரம் சுமாராக இருக்கும்.

பெண்கள் அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு.

பரிகாரம்: குருபகவானுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுங்கள். ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யுங்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்: கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோவில்

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*撚மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை*விட நல்லதாகும்..!!