மேஷ ராசி

மேஷம்
(அஸ்வினி 1-2-3-4 பாதங்கள், பரணி 1-2-3-4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம்)
வான மண்டலத்தில் உள்ள ராசிகளில் முதல் ராசியான நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாயின் வீட்டிற்கு உரியவரான மேஷம் ராசி அன்பர்களே!
யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும் உடையவர்கள் ஆவீர்கள். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் பகவான் விளங்குவதால் எதிலும் முதன்மையானவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் வல்லமையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் இழக்கத்தயாராகவும் இருப்பீர்கள். எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் தைரியமும் வீரமும், விவேகமும் உடையவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இதுகாரும் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். 
தற்சமயம் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அதாவது தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகவும் நற்பலன் என்று தான் கூற வேண்டும்.
ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை உண்டு பண்ணுவார். 
சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள்.
எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். மற்றவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமில்லாமல் உங்கள் நட்பை விரும்பி போற்றுவர்.
உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களைப் பற்றிய செய்திகள் பரவலாக பரவும். அவை நல்லவிதமாக அமையும்.
அடிக்கடி பயணங்கள் ஏற்படும். நீண்ட தூர பிரயாணங்கள் ஏற்படும். வீடு, இடம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுப்புது விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
தாயாரின் அன்பும் ஆதரவும் இக்காலங்களில் நன்கு அமையும். மேலும் ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், நிறைய வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்க வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும். மேலும் அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில், சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.
விருந்து, உல்லாசம், விளையாட்டு, கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருத்தல் வேண்டும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். 
பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு செய்யக் கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மை உண்டாகும்.
வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்களால் நன்மை ஏற்படும். 
சுய தொழில் செய்ய வாய்ப்பும், தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பங்களும் வந்து சேரும். முன்னோர்களது சொத்துகள் கிடைக்கும். அடிக்கடி புனித ஸ்தல யாத்திரையும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பும். வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடைபெறும் வாய்ப்பும் உண்டாகும்.
தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு முதலாளிகளாக உயர்வதற்க்கு வாய்ப்பும் உண்டாகும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.
மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். அவர்களால் நன்மையும் எற்படும்.