மீன ராசி

மீனம் ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

 - மீனம்

குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சாதகமாக அமையும். ராகுவின் பலன் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சமுக மதிப்பு குறைந்தாலும், குடும்ப மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியிடையே அன்பும், நெருக்கமும் நீடிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பணியாளர்கள் நிர்வாக அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

வியாபாரிகள் உழைப்புக்கேற்ப பலன் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். புதிய தொழில் முயற்சியைத் தற்போது தொடங்க வேண்டாம்.

கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெற முடியும்.

மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.

விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயத்தை தவிர்ப்பது அவசியம். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம்.

பரிகாரம்: சனி, கேதுவை வழிபாடு செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கையை வணங்குங்கள். ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்ட பின் சாப்பிடுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் விளக்கேற்றுங்கள்.

செல்ல வேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்.

 

 

 

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!