மீன ராசி

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி 1-2-3-4 பாதங்கள், ரேவதி 1-2-3-4 பாதங்கள்)
வான மண்டலத்தில் 12அது ராசியாக உள்ள உங்கள் மீனம் ராசிக்கு அதிபதி குருவாகும்.

தெய்வத்திற்கும் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டவர்கள் நீங்கள். எப்பொழுதும் எதையும் நிதானமாக யோசித்துச் செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பும் உடையவர்கள்.

எதிலும் ஈடுபாட்டுடன் முனைந்து செயல்படும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆவீர்கள்.
இப்படிப்பட்ட குணம் உடைய உங்கள் மீனம் ராசிக்கு சனிபகவான் உங்கள் ராசிக்கு இதுவரை 9ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 10ம் இடமான தொழில் ஜீவ ஸ்தானத்திற்கு வந்து பலன் அளிக்க உள்ளார்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 11, 12 மற்றும் வீட்டுற்கதிபதியாவார், அவர் உங்கள் ராசிக்கு இப்பொழுது 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். பொதுவாகவே சனி பகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செயவது சிறப்பு என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. 
உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ் அந்தஸ்து சற்று கூடும்.

அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து சேரும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும். எப்பவும் அவசரப்படாமல் எதிலும் சற்று நிதானித்துச் செயல்படுவீர்கள் என்றால் வெற்றி நிச்சயமாகும்.
தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பொழுது தான் வீண் விரையச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும்.

அடிக்கடி பயணங்கள் ஏற்படும். பேச்சில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.

அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக இராது. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். 
உறவுகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மனவருத்தங்கள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும், பழைய பொருளை விற்றுப் புதிய பொருட்கள் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டியது வரும்.

அல்லது வீடு மராமத்து மற்றும் தேவையற்ற விரையங்கள் ஏற்பட்டு விலகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்குப் போவதில் முட்டுக்கட்டை ஏற்படும் பின் நிறைவேறும். நல்ல வசதியான வீடு ஒரு சிலருக்கு அமையும்.
மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும்.

வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும். 
போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நனமையேற்படும்.

வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் நன்மையேற்படும்.
இதுவரை திருமணத்தில் இருந்த தடை நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
நண்பர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். புதிய நட்புகளால் எதிர்பார்த்த நன்மைகளும் அமையும்.