தனுஷ் ராசி

வெளிநாட்டு பயணங்கள் கை கூடி வரும், புதிய முயற்சிகள் யோகத்தை கொடுக்கும். குருவை ராசி நாதனாகக் கொண்ட நேர்மையான எண்ணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு ஜென்ம சனியின் தாக்கம் இருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. விரைய குரு சுப விரையங்களை ஏற்படுத்துவார். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. புதிதாக அறிமுகம் ஆனவர்களை நம்பி எந்த செயலையும் செய்ய வேண்டாம். திருமண சுப காரியங்கள் நடைபெறும். புதிய வீடுகளை வாங்க கடன் உதவி கிடைக்கும். ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் அமரப்போகிறார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும். இது நாள் வரை கூட்டு தொழில் செய்தவர்கள் பிரிந்து புதிய தொழில் தொடங்கலாம். மோட்ச கேதுவுக்கு ஞானகாரகன் குரு சேர்க்கை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.