விருச்சிக ராசி

விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

விருச்சிகம்

குரு 12-ம் இடத்தில் இருப்பதால் நன்மை தரமாட்டார். மற்ற கிரகங்களும் சாதகமாக இல்லாததால், வாழ்வில் தடைகள் குறுக்கிடலாம். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். பண வரவு திருப்தி அளித்தாலும், செலவும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. வெளியூர் பிரயாணத்தில் கவனம் தேவை.

பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ப வருமானம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படலாம். எதிரிகளால் அவ்வப்போது பிரச்னை குறுக்கிடும். புதிய முதலீடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

 

மாணவர்கள் முயற்சியுடன் படிப்பது நல்லது.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்காது.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். யானைக்கு கரும்பு, பழம் கொடுங்கள். காளியம்மனை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரம், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.

செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*撚மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை*விட நல்லதாகும்..!!