விருச்சிக ராசி

பட்டம் பதவிகள் கூடி வரும். வெற்றியை இலக்காகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.... இந்த ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. பாத சனி நடந்தாலும் ஜென்ம குரு சாதகமான பலன்களையே தந்து கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். விருந்தினர்களின் வருகையினால் வீடு களைகட்டும். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். ரகசிய வழியில் நன்மையைத் தரும். ராகு 8ஆம் வீட்டில் மறைகிறார். ராகு சூது கிரகம் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். வருமானம் சேமிப்பு உயரும்.சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். செயல்களில் வெற்றி கிடைக்க திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள்.