சோதியம்
வான சாத்திரமே ஜோதிடமாக மாறப்பட்டது, நட்சத்திர கூறுகளே 27 நட்சத்திரமாக கூறப்படுகிறது. நட்சத்திரங்களின் தாக்கங்களையும் கிரகங்களின் தாக்கங்களையும் வைத்து ஜோதி உருவில் கணித்து ஜோதிடமாக கூறப்படுகிறது.சோதியம் கூறுதல் என்கிற தமிழ்ச் சொல்லே திரிந்து மருவி சோதிடமானது. சோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்களின் நிலை மற்றும் விண்மீண்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப் படுவதாகும்.
எல்லாம் சரிதான், அது என்ன திதி?
திதிகள் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமே ஆகும். சூரியன் சந்திரன் இணைந்து இருப்பது அமாவாசை திதி ஆகும். சூரியனை விட்டு சந்திரன் விலகி செல்லும் தூரமே பதினைந்து திதிகள் ஆகும். சூரியனுக்கு நேர் எதிரே ஏழில் சந்திரன் வரும் போது பௌர்ணமி திதி ஆகும் அது சுக்லபட்ஷம். சூரியனை நோக்கி சந்திரன் வருவது கிருஷ்ணபட்ஷம் ஆகும்.சுக்லபட்ஷம் என்பது சந்திரன் வளரும் காலம் என்பதால் வளர்பிறை என்றும், கிருஷ்ணபட்ஷம் என்பது சந்திரன் தேய்ந்து சூரியனுடன் இணையும் காலம் தேய்பிறை என்றும் கூறப்படுகிறது. பெளர்ணமி திதி முதல் அமாவாசை திதி வரையான பதினைந்து நாட்களை ”தேய்பிறை திதி” என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ளணமி வரையான பதினைந்து நாட்களை ”வளர்பிறை திதி” என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் ”கிருஷ்ணபட்சம்”, ”சுக்கிலபட்சம்” என்பர்.
இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.
ஒருவர் பிறந்த திதியை அறிவது எப்படி?
ஒருவர் பிறந்த நேரத்தில் அன்று என்ன திதி நடைபெறுகிறதோ அதுவே அவர் பிறந்த திதி எனப்படும். பொதுவாக எல்லோர் ஜாதகத்திலும் பிறந்த திதி குறிப்பிடப்பட்டிருக்கும் பிறந்த திதி தெரியாதவர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பிறந்த தேதியயும் நேரத்தையும் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் உங்களுக்கான திதியை பார்த்து சொல்லிவிடுகிறோம்.
இனிவரும் நாட்களில் இந்த திதிகள் ஒவ்வொன்றுக்கும் அகத்தியர் அருளிய பலன்களை பார்ப்போம்.