ரிஷப ராசி

ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

ரிஷபம்

ராகுவும்-கேதுவும் சாதகமற்ற இடத்தில்தான் இருக்கிறார்கள். இந்த காலத்தில் குருவும் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அடி யெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப் புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும், அவரது 9-ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண முடியும்.

விவசாயத்தில் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.

பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

 

பரிகாரம்: ராகு கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நயினாரை மனதில் நினைத்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

செல்ல வேண்டிய தலம்: ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில்.

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!