ரிஷப ராசி

 à®°à®¿à®·à®ªà®®à¯

(கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், ரோகிணி 1-2-3-4, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்)
வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் இரண்டாவது ராசியாக நவகிரகங்களில் சகல சுகங்களையும் அனுபவிக்க வல்ல கிரகமான சுக்கிரன் வீட்டிற்கு உரியவரான ரிஷபராசி அன்பர்களே!
எவரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன் எதிர்கொண்டு வரவேற்பவர்கள்.

மற்ற எல்லா கிரகங்களைக் காட்டிலும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் மற்றும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்கிரன் பகவான் உங்கள் ராசிநாதனாக உள்ளார். அவர் நல்ல படிப்பிற்கும், பேச்சுக்கும், பணப் புழக்கத்திற்கும் சகல சௌபாக்கியத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கிறார்.

அப்படிப்பட்ட சுக்கிர பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுவரை 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்த சனி பகவான் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலன் தான் என்றே கூற முடியும்.

இதுவரை 7ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.

உங்களது ராசிக்கு 8ம் ராசியான தனுசு ராசிக்கு சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.
தேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.

அதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் எதிர்பாராத தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும்.
நெருங்கிய உறவினர்களை பிரிய நேரிடும்.
வெளியூருக்கு அடிக்கடி பயணங்கள் செய்யும் நிலை உண்டாகும். அதனால் அலைச்சல்களும் உடல் வேதனைகளும் தான் மிஞ்சும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய இடத்தை கொடுத்து புதுமனை வீடு வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் போராட்டங்கள் ஏற்பட்டு இறிதியில் வெற்றி கிட்டும்.
தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. எல்லா விஷயங்களிலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும்.

குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வந்து மறையும். குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்த்து வருதல் அவசியம். அவர்களின் செயல்பாடுகளை நன்கு கண்காணித்து வருதல் வேண்டும்.
வழக்குகள் தேவையற்ற மனச்சஞ்சலங்களை உண்டாக்கும்.

பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
அரசாங்க விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து கொண்டு அதன் பின் எதிர்பார்த்த வேலைக்கு முயற்சி செய்யவும் வேலைக்காரர்களால் பிரச்சனைகள் உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில் அதிக கட்டுப்பாடு அவசியம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மையே ஏற்படும். தாய்மாமங்களின் உறவு நன்கு அமையும்.

சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டாலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முயற்சி என்ற ஒன்றை விடாமல் மேற்கொள்ளல் வேண்டும்.
வேலையில் போட்டி பொறாமைகள் தடைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விருப்பமில்லாமல் இருந்தாலும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.

அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.
அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதையும் நிதானமாக கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்புவர்கள் துரோகம் செய்வார்கள்.

எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. 
ஆபரேஷன் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன்பின் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும்.