ரிஷப ராசி

தன ஸ்னாத்தை குரு பார்ப்பதால் தன தானியங்கள் பெருகும் கலை உணர்ச்சியும் காதல் உணர்வும் அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தரப்போகிறது. ஆண்டின் துவக்கத்தில் குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். அதிசாரத்திலும் வக்ரகதியாகவும் செல்லும் குருபகவானால் பொருளாதார நிலை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும். பணம் வருவது போல வந்தாலும் கூடவே செலவுகளை இழுத்துக்கொண்டு வரும். அஷ்டமத்து சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் பிற கிரகங்களின் சேர்க்கையினால் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சியாகி 2ம் இடத்தில் ராகுவும்,8ம் இடத்திற்கு கேதுவும் அமர்கின்றனர். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு.எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.