கன்னி ராசி
கன்னி
(உத்திரம் 2, 3, 4, பாதங்கள், அஸ்தம் 1-2-3-4 பாதங்கள், சித்திரை 1, 2 பாதங்கள்)
வான மண்டலத்தில் 6வது ராசியாக வலம் வரும் கன்னி ராசியின் அதிபதியான புதன் உங்கள் ராசிநாதன் ஆவார்.
கல்விக்கும் வித்தைக்கும் ஞானத்துக்கும் அறிவிக்கும் ஆற்றலுக்குமான புதன் பகவான் ராசியில் பிறந்த நீங்கள் எதையும் நின்று நிதானித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள்.
எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செயல்படும் நீங்கள் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மாற்றம் என்ற சொல்லுக்கு நீங்களே எடுத்துக் காட்டாகும். எண்ணிய எதையும் செய்யும் ஆற்றலும் துணிச்சலும் உடைய நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
அறிவிக்கும் சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும் உரியவரான நீங்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து தேவைக்கு மட்டும் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள் மாற்றம் என்ற கருத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய உங்களுக்கு இந்த சனிபகவான் இதுவரை உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ம் இடத்தில் தனசு ராசியில் சஞ்சாரம் செய்வார்.
இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ பயமோ கொள்ள வேண்டாம்.
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.
மேலும் 4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.
மேலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 6ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவதால் வேலையில் கவனம் தேவை. 5ம் இடம் என்பது பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவது அல்லது வெளியேற்றபடுவது என்பதைக் குறிக்கும்.
எனவே அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.
சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்படும்.
அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார். எனவே உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்தல் வேண்டும். அப்பொழுது தான் வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும்.
இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் தோன்றி வேலையை விட வேண்டியது வரும்.
புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சற்று கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது.
சகோதர சகோதரர்களில் அன்பும் ஆதரவும் இருந்தாலும் அவர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும்.
இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். தாயாரின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. இனம் தெரியாத நோய்களால் அவதிப்பட நேரிடும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக கவனம் தேவை. அதில் மகிழ்ச்சியற்ற செயல்கள் நடந்தேறும்.
குழந்தைகளால் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் இனிதே நடந்தேறும். நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். வழக்குகள் சாதகமாக இராது. தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும்.
கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும்.
கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். கடுமையான எதிர்ப்பிற்க்குப் பின் காதல் நிறைவேறும் காதலால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் வந்து சேரும்.
தொழில் முதலீட்டில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது.
தொழிலில் கூட்டாளிகளுக்கு ஆக உழைக்க வேண்டி வரும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் வந்து சேரும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் இருந்து வரும். கடை, தொழில் நிலம் தோட்டம், பண்னை, பயிர் செய்யும் நிலம் வாங்கவும் கடை, அலுவலக கட்டிடம் கட்டவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் உருவாகும். எதையும் தள்ளிப் போடுவது ஒத்திப் போடுவது கூடாது.
அன்றைய வேலைகளை அன்றே செய்து முடிக்க வேண்டும்.