மேஷ ராசி

மேஷம் ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

மேஷம் :

கேதுவும், குருவும் சாதகமான இடத்தில் இருப்பார்கள். அவர்கள் சுபநிகழ்ச்சியை நடத்தித் தருவர். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.

கணவன்-மனைவி இடையே அன்னியோனியம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் மாறி, மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். ராகுவால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து போகும்.

பணியில் மேம்பாடு காணலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் வெற்றி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.

கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர்.

மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும்.

விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். கேதுவால் உடல் நலம் சிறப்படையும்.

 

பரிகாரம்: ராகுவுக்கும், சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!