சிம்ம ராசி

சிம்மம்

(மகம் 1-2-3-4 பாதங்கள், பூரம் 1-2-3-4 பாதங்கள், உத்திரம் - 1ம் பாதம்)
வான மண்டலத்தில் 5வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசி நாதன் ஆகிய சூரியபகவான் நவக்கிரகங்களில் முதலாவது கிரகமாகும். உலக உற்பத்திக்கும், உயிர்கள் வாழ்வதற்கும் சீராக தன்னுடய கதிர்களை வாரி வழங்கும் வல்லமை பெற்ற சூரியன் கிரகங்களில் நம்முடைய கண்களுக்கு தெரியும் முதல் கிரகமும் ஆகும்,

மற்றும் எல்ல கிரகங்களுக்கு தலைமையாக உள்ளவர் சூரிய பகவான் ஆவார். 
நவக்கிரகங்களில் முதன்மையானது சூரியன் ஆகும். அதுபோல் அரசாளும் யோகமும், எதிலும் முதன்மையாகவும் விளங்க விருப்பமுடையவர்கள். நீங்கள் பொன்னையும் பொருளையும் பெரிதாக மதிக்கும் இவ்வுலகில் புகழுக்காக இவ்வுலகில் எதையும் துணிந்து செயல்படுவீர்கள்.

நிர்வாகத் திறமை ஆட்சி அதிகாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு உரியவரான நீங்கள் எதையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள் இக் குணநலன்கள் உடைய உங்களுக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து சஞ்சாரம் செய்து அளிக்ககூடிய பலன்களை பார்க்க இருக்கிறோம்.

உங்களது ராசிக்கு 5ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெற கூடிய வாய்ப்பாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பாகும்.
சனிபகவான் பாபக்கிரகம் என்பதால் உங்களது ராசியின் 5ம் இடமான புத்தி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது புத்தியின் தன்மைகேற்ப செயல்படுவீர்கள், சிலசமயம் நல்ல அறிவும் ஆற்றலுடன் சிந்திக்கும் குணமுடைய நீங்கள் சில சமயங்களில் மறதியும், கவனச் சிதறலும் உடையவராக இருப்பீர்கள்.

உடல் ஆரோக்யம் சீராகி மகிழ்ச்சியாக இருக்கும். பிணி மற்றும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும் பேச்சில் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் நட்புறவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சலுகை கிடைக்கும்.

சனி தசை நடக்கும் சிலருக்கு குழந்தைகளால் பிரச்சனை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழல் ஏற்படும். அதே சமயம் நன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு நன்மையாக அமையும்.
உங்கள் பணம் பொருள் காணாமல் போகும் வாய்ப்பிருக்கிறது.

விருந்து கேளிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விலகும். பூஜை, புனஸ்காரங்கள், கோவில், குளம், பக்தி பிரார்த்தனைகள் இவற்றில் அதிக ஈடுபாடு ஏற்படக் கூடும்.
காதல் விஷயங்கள் உற்சாகமாக இருந்து வரும். காதல் கை கூடி திருமணத்தில் ஒரு சிலருக்கு முடியும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். வழக்குகள் ஜெயிப்பது போல் தோன்றினாலும் எதிரி வெற்றி பெறும் வாய்ப்புண்டு.

வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலேயே உங்கள் நிலை இருக்கும். பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. 
ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும்.

உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. நண்பர்களால் தேவையற்ற வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு கடும் முயற்சிக்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். 
ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டி நிறைந்த உலகத்தில் ஜெயிக்க முடியும்.