துலா ராசி

திருமண யோகங்கள் கூடி வரும், கூட்டு தொழில் அபிவிருத்தி ஆகும். சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரம் பண வருமானத்தை கொடுத்தாலும் சிலருக்கு மருத்துவ செலவுகளைத் தரும். சிக்கனமாக செலவு செய்யவும். யாருக்கு உதவி செய்யும் முன்பு யோசித்து செய்யவும். குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சனிபகவான் சஞ்சாரம் மூன்றாம் வீட்டில் இருக்கிறது. கூடவே குருவும் இந்த ஆண்டு அமரப்போகிறார். கேதுவும் அமர்கிறார். நடக்கும் தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம். ராகு கேது பெயர்ச்சியினால் நிர்வாக பொறுப்புகள் தேடி வரும் கூடவே வசதி வாய்ப்புகளும் வரும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் யோகத்தை தரும். முருகப்பெருமானை சஷ்டி நாளில் வழிபட சங்கடங்கள் தீரும்.