தனுஷ் ராசி

தனுசு ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

தனுசு

குருபகவான் சாதகமான இடத்தில் இருப்பதால், கடந்த கால பின்தங்கிய நிலை இனி இருக்காது. பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி அனைத்தும் சிறப்பாக முடியும். தடைகளை முறியடித்து எளிதில் வெற்றி காண்பீர்கள். மக்கள் மத்தியில் மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். குடும்பத்தில் வாய்ப்பு வசதி பெருகும். தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும்.பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு கட்டவும், புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்புண்டு. குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

பணியாளர்களுக்கு கடந்த கால பிற்போக்கான நிலை மறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இட,பணி மாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர்.

வியாபாரிகளுக்கு அலைச்சலும், பணிச்சுமையும் இருக்கும். அரசுவகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

கலைஞர்கள் மிகச் சிறப்பான பலன் பெறுவர்.

அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். விவசாயத்தில் ஆதாயம் அதிகரிக்கும். நெல், கோதுமை, மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.

பெண்கள் பிறந்த வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வர்.

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரம் சாத்தி வழிபடுவது நல்லது. பிரதோஷத்தன்று சிவனை வணங்குங்கள்.

செல்ல வேண்டிய தலம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்.

 

 

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!