கன்னி ராசி

கன்னி ராகு கேது பெயர்ச்சி

27.07.2017.முதல்.13.02.2019வரை.

குருபகவான் 2-ம் இடமான துலாமிற்கு வருவதால் நன்மை உண்டாகும். குருவின் பலத்தால் மந்த நிலை மாறும். புதிய முயற்சியைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். சமுக மதிப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். நீண்ட காலமாக தடைபட்ட திருமணம் கை கூடும். உறவினர் வகையில் அனுகூலம் பிறக்கும். புதிய வீடு கட்ட வாய்ப்புண்டு.

பணியாளர்களுக்கு வேலை பளு குறையும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர்.

இடமாற்ற பீதி மறையும். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை

கிடைக்கும்.

வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலை இனி இருக்காது. ஆசிரியர்களின் ஆதரவால் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விவசாயிகளுக்குப் புதிய நிலம் வாங்கும் வாய்ப்புண்டாகும். பெண்கள் குடும்ப வளர்ச்சியில் பங்கேற்பர்.

பரிகாரம்: நவக்கிரகங்களை தவறாமல் வழிபடுங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுக் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படையுங்கள்.

 

 

செல்ல வேண்டிய தலம்: திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள தகட்டூர் பைரவர் கோவில்.

 

சத்தியம் என்பது

மனவலிமை

சாந்தம்

என்பது மனஅடக்கம்

*"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.*

*மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

முகம் மலர்ந்து *இன்சொல்* உடையவனாக இருக்கப்பெற்றால்,..மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும்  *ஈகையை விட நல்லதாகும்..!!