இணையதளத்தில் தங்கள் ஜாதகப் பலன்களை அறிய தங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (+91-98428 46104) அனுப்பவும்.

ஜனன ஜாதகம்

ஜனன ஜாதகம்

ஒரு ஜனன ஜாதகத்தை ஆய்வு செய்யும் போது கவனிக்க வேண்டியமுக்கியவிஷயங்கள்.

ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும் போது நேரம் தான் முக்கியம்.  ஜாதகர் பிறந்த நேரம், பலன் கேட்க வந்த நேரம் ஒத்துப் போகிறதா என்று முதலில் கவனமாக பார்க்கவேண்டும்.

அதற்கு முதலில் ப்ரஸ்ன்ன ஜாதகம் கணித்துக் கொள்ளவும்.  அப்போது உதயமாகியுள்ள லக்னம்  மற்றும் கோச்சாரப்படி கிரகங்கள் எங்கு எந்த நக்ஷத்திர சாரத்தில் சஞ்சரிக்கின்றன என்பதை குறித்துக் கொள்ளவும்.

பலன் கேட்க வந்தவரின் ஜனன ஜாதகத்தில் அவரின் உடலான ராசி அதாவது சந்தர லக்னத்தை வைத்து அன்றய கோச்சாரப்படி உள்ள கிரஹங்கள் அவரின் கேள்விகளுக்கு நல்லதை சொல்லக்கூடிய நிலையில் உள்ளனவா என்பதையும்,

கோச்சார கிரஹங்கள் அவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் இடங்களோடு சம்பந்தப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.

 

ப்ரஸ்ன்ன லக்னம் ஜாதகரின் ஜன்ம லக்னம் /ராசி ஒன்றாகவோ அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணத்திலோ இருந்தாலும்,

ப்ரஸ்ன்ன ஜாதக ராசி ஜாதகரின் ஜன்ம லக்னம்/ராசி யும்  ஒன்றாகவோ அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணத்திலோ அமைந்தால் ஜாதகம் சரியாகவும், பலன்களும் சரியாகவும் இருக்கும்.  அப்படி இல்லை என்றால் தவறுகள் ஏற்படலாம்.

முதலில் ஒருவர் வந்து தனக்குள்ள நோயைப் பற்றி கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்:

முதலில் அவரின் வந்த நேரத்திற்குரிய ப்ரஸ்ன்ன ஜாதகம் கணித்துக் கொள்ளவும்.

உதாரண ப்ரஸ்ன்ன ஜாதகம்:

சிம்ம லக்னம், விருச்சிகத்தில் செவ்வாய்,

தனுசில் கேது, கும்பத்தில் சந்திரன், மேஷத்தில் சுக்ரன், ரிஷபத்தில் சூரியன், புதன், குரு, சனி,  மிதுனத்தில் ராகு

ஜன்ம நக்ஷத்திரம் பூரட்டாதி

கேள்வி நோய் சம்பத்தப்பட்டதால், உதய லக்னம், மற்றும் ஆறாம்இடம் அதன்அதிபதி ம்ற்றும்

உடல் சம்பந்தப் பட்டதால் ராசி அதன் அதிபதி, ஆயுள் ஸ்தானம் அதன் அதிபதி,

ஆயுள்காரகர் சனி  அதன் பிறகு நோயை குணப்படுத்தும் தன்மையும் அதிகாரமும் கொணட குருவின் நிலையும் மற்று நோயை எதிர்க்கும் சக்திக்கு தைரிய ஸ்தானமான 3ம் இடமும் அதன் அதிபதியையும் பார்க்கவேண்டும்.       

இந்த ஜாதகத்தில் 6ம் இடமான நோய் ஸ்தான அதிபதி சனி.  அவரே ஜாதகரின் உடலான ராசியின் அதிபதியும் ஆகிறார். 

(லக்னம்: உயிர்.   உடல்: ராசி)  இவர் ராசிக்கு 4ல் நின்று ராசியை  10ம் பார்வையாக பார்க்கிறார்.

லகனத்திற்கு 10ல்  நோயை குணமாக்கும் குருவோடு இணைந்துள்ளார்.

சூரியன் (லக்னாதிபதி) ரிஷபத்தில் பகை என்றாலும் லக்னத்திற்கு 10ல் நின்று திக்பலம் பெறுகிறார்.

8க்குடைய ஆயுள் ஸ்தான அதிபதியும் நோயை குணமாக்கும் அதிகாரமும் உள்ள குரு பகையாகி அஸ்தமனம் பெற்றுவிட்டார்.

மேலும் உடலான ராசியின் 6க்குடையவரே சந்திரனாகி (ராசியில் இருந்து) ராசியில் நின்றும், லக்னத்திற்கு 6க்குடைவரான சனி  ஆயுள் காரகனும் ஆகி ராசியை பார்பதாலும், அவர் சிம்ம லக்னத்திற்கு பகைவர் என்பதாலும் நோயின் தன்மை அதிகம் உண்டு.

குருவின் பார்வை ராசிக்கோ, லக்னத்திற்கோ இல்லை என்றாலும், 6ம் இடத்திற்கு  9ம் பார்வையாக உள்ளதால் உரிய வைத்தியம் மூலம் சிறிது தாமதமாக குணமாகும்.

மேலும் தைரிய ஸ்தான அதிபதியும் செயல் காரகனுமாகிய 3ம் இட அதிபதி சுக்ரன் ஆயுள் ஸ்தான அதிபதி குரு முறையே லக்னத்திற்கு 9 மற்றும் 10 இடத்தில் உள்ளதால் (திரிகோணம், கேந்திரம்) ஆயுளுக்கு பங்கம் இல்லை.

இதேபோல் பிள்ளையின்திருமணம் சம்பந்தமாக கேட்டால் 5ம் இடம், 5க்கு 7ம் இடம்(பிள்ளையின் களத்ர ஸ்தானம்) குரு இவர்களின்நிலையை ஆராயவேண்டும்.

அதே போல் தொழில், கடன் நிவாரணத்தை பற்றி கேட்டால் 10ம் இடம், அதன் அதிபதி, 6மிடம் அதன் அதிபதி குருவின் நிலை,  லக்னாதிபதி இவர்களின் நிலை ஆராயப்படவேண்டும்.

மேலும் மேற்ச்சொன்ன எல்லாவற்றிற்க்கும் சனியின் பலமும், 3மிடம் மற்றும் அதன் அதிபதி இவர்களின் நிலையும் ஆராயப்படவேண்டும்.

சூரியனையும், சந்திரனையும் தவிர மற்ற கிரஹங்கள்.

(ராகு, கேது தவிர) இரண்டு ஆதிபத்யம் பெறுகின்றன.  ஒன்று சுப ஆதிபத்யம், மற்றொன்று பாவ ஆதிபத்யம்.

உதாரணமாக சிம்ம லக்னத்திற்கு 5ம் ஆதிபத்யம் உள்ள குரு 8ம் ஆதிபத்யமும் பெறுகிறார்.

இவர் ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு 4ல் அதாவது விருச்சிகத்தில் நின்றால்  (8க்குறியவர் 4ல் நின்றால்) தாயார் மூலம் கிடைக்கவேண்டிய சுகங்கள் கிடைக்காது.

ஆனால் 5க்குறியவர் 4ல் நின்றால் ஜாதகன் மகிழ்ச்சியாக வாழ்வான், தாயார் மூலம் கிடைக்க வேண்டிய சுகங்களை பெறுவான். 

இந்த இரண்டையும் பார்க்கும் போது சற்று  குழப்பமாக இருக்கிறதல்லவா.

இந்த நிலையில் நீங்கள் அந்த கிரஹத்தின் மூலத்திரிகோண ஆதிபதயம்  சுப ஆதிபத்யமாக வருகிறதா அல்லது பாப ஆதிபத்யமாக வருகிறதா என்று பார்க்கவேண்டும்.  எனவே குரு சிம்ம லக்ன ஜாதகருக்கு 5ம் வீட்டில் அதாவது தனுசில் மூல திரிகோண ஆதிபத்யம் பெறுவதால் அது சுப ஆதிபத்யம் ஆகிறது.

எனவே 8ம் வீட்டில் அதாவது மீனத்தில்அவர் பாப ஆதிபத்யம் பெறுவது பலமற்று போய்விடும். அதாவது கெடு பலன் குறைந்துவிடும்.

அதே போல் குரு மேஷ லக்னத்திற்கு 9 மற்றும் 12ம் ஆதிபத்யம் பெறுகிறார்.

இவர் லக்னத்தில் நின்று 9ம் பார்வையாக தன் வீட்டையே அதாவது பாக்யாதிபதி பாக்ய ஸ்தானத்தை பார்த்தாலும் சுப பலனை குறைவாகவே தருவார்  ஏன் என்றால் அவர் 12ம் ஆதிபத்யமான விரய ஆதிபத்யத்தையும் பெறுவதால் அது பாப ஆதிபதயமாகும்.   எனவே பலன் சொல்லும் போது எல்லாவற்றையும் கவனித்து பொறுமையாக பலன் சொல்லவேண்டும்.

அதாவது  9ம் ஆதிபத்யப்படி ஜாதகர் அதிர்ஷடமுள்ளவராக இருப்பார், அரசாங்க ஆதரவு உண்டு. ஆனால் அவரே விரயாதிபதியாக உள்ளதால் ஜாதகர் செலவாளியாக இருப்பார், அவரின் ஆரோக்யம் கெட்டுப்போகும் என்று கூறவேண்டும்.  

மானசீகமான கிரஹ தியானங்களும் தொழுதலும் மட்டும்தான் உங்களை ஒரு சிறந்த ஜோதிஷனாக ஆக்கமுடியும். ஏன் என்றால்  பலன் சொல்வதற்கு அறிவு 10%, ஞானம் 15%  தெய்வ உதவி 75% வேண்டும்.

ஒரு ஜாதகர் உங்களிடம் வந்து எதைப்பற்றி கேட்கிறாரோ அதற்கு உண்டான பாவ ஆதிபத்யங்களின் பலத்தையும் அந்த பாவங்களை பார்க்கும் கிரஹங்களின் பலத்தையும் மட்டும் பார்த்து பலன் சொன்னால் போதும்.

சம்பந்தம் இல்லா மற்ற பாவங்களின் செயல்பாடுகளை பற்றி கூறாமல் தவிர்த்து விடுதல் நல்லது.

www.agathiyarjanachithar.in,

www.agathiyarjanasidhar.blogspot.com

+91-98428 46104

+91-93818 46104

Email: astrologyiyer@gmail.com

ஏன் என்றால் உங்கள் சக்திகளை அதிகம் வீணாக்காமல் இருப்பது நல்லது என்பது என்னுடைய பணிவான கருத்து.

தொடர்புடைய பதிவுகள்

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை - விஜயதசமி

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை - விஜயதசமி

ஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை- விஜயதசமி- சாமி கும்பிட நல்ல நேரங்கள்

நவராத்திரி பண்டிகை

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்ம பலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.

மறைக்கபட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

மறைக்கபட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

 

ஃ  ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓன்று உள்ளது.
ஃ  இது மறைக்கபட்டது ,வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை.
ஃ  இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை.
ஃ  இந்த மந்திரத்தை எந்த நிலையிலும்  எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம் இதனுடய பெருமை

FacebookInstagramYouTube